ஆபரேஷன் கந்துவட்டி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 பேர் கைது
தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் *Operation Kanthuvatti* திட்டத்தின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என அறிவித்தார். அவ்வகையில் காவல் கண்காணிப்பாளர் காஞ்சிபுரம் அவர்களின் உத்தரவின்படி,
சிவகாஞ்சி காவல்நிலையம் மளிகை தெருவைச் சேர்ந்த நாகூர் மீரான் என்பவர், சின்னசாமி நகரைச் சேர்ந்த மகாதேவன் என்பவரிடமிருந்து *ரூபாய் 1,70,000 /-* கடன் பெற்றுள்ளார். அதற்கு வட்டியாக 93 மாதங்களுக்கு ரூபாய் 4,74,300 / -ம் , கடந்த 2020 நவம்பவர் மாதம் முதல் 2021 பிப்ரவரி மாதம் வரை நான்கு மாதம் 10,000 / - வீதம் கடன் தொகை கட்டி வந்த நிலையில் ஆகமொத்தம் இதுவரை ரூபாய் 5,14,300 /- செலுத்தியுள்ளார். மேற்படி மகாதேவன் மேலும் ரூபாய் 1.30,000 /- அசல் மற்றும் கந்துவட்டி கேட்டு மிரட்டியுள்ளார். இது தொடர்பாக நாகூர் மீரான் 11.06.2022 அன்று கொடுத்த புகாரை பெற்று சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதேபோன்று உத்திரமேரூர் காவல்நிலையம் பஜார் வீதி, பிரபு அவெனயூவைச் சேர்ந்த *அப்துல் ரவுப் என்பவர், கருவேப்பம்பூண்டி காலனியைச் சேர்ந்த தணிகைவேல் என்பவரிடமிருந்து ரூபாய் 1.50,000 / - கடன் பெற்றுள்ளார். அதற்கு மாதா மாதம் வட்டி கட்டி வந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வட்டி கட்டாமல் இருந்து வந்த நிலையில் 11.05.2022 அன்று ரூபாய் .70,000 /- எதிரியிடம் கொடுத்தபோது அவர் இப்பணத்தை அசலில் கழிக்காமல் கந்துவட்டியாக கொடுக்க வேண்டும் என்று கூறி வாங்க மறுத்துவிட்டு, எதிரி இனிமேல் எனக்கு பணம் தராமல் கடையை திறக்க கூடாது என அசிங்கமாக பேசி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக உத்திரமேரூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையம் சிவந்தாங்கல் செக்போஸ்ட், பேங்களூர் மெயின் ரோட்டைச் சேர்ந்த *ரஞ்சித்குமார் என்பவர் கச்சிப்பட்டு காலனி , கருக்குத் தெருவைச் சேர்ந்த சிம்பு ( எ ) வினோத்குமார் என்பவரிடம் வீட்டு பத்திரத்தை கொடுத்துவிட்டு ரூபாய் 1,00,000 / - கடன் பெற்றுக்கொண்டு அதற்கு வட்டியாக ரூபாய் 72,000 / - கட்டியுள்ளார். இந்நிலையில் 11.06.2022 அன்று மீண்டும் பத்திரத்தை திரும்ப கேட்டபோது 4 மாதம் வட்டி பாக்கி ரூபாய் 24,000 / உள்ளதாகவும் , அதற்கு வட்டி ரூபாய் 3840 / - ஆக மொத்தம் 1,27,840 / கொடுத்தால்தான் பத்திரம் தருவதாகவும் , பணத்தோடு ஒரு வாரத்திற்குள் வரவில்லையென்றால் பத்திரம் கிடையாது எனவும் மீறி கேட்டால் தொலைத்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், காஞ்சிபுரம், பல்லவர்மேடு கிழக்கு பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்பவர் காஞ்சிபுரம், பாவாசாகிப் தெருவைச் சேர்ந்த பூபதி என்பவரிடமிருந்து ரூபாய் 1,50,000 / - கடன் பெற்றுள்ளார். அதற்கு வட்டியாக 38 மாதங்களுக்கு ரூபாய் 1,71,000 / -ம், அசல் ரூபாய் .50,000 / - ஆகமொத்தம் இதுவரை ரூபாய் 2,21,000 / - செலுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த ஆறு மாதமாக தொழிலில் சரிவர வருமானம் இல்லாததால் வட்டி செலுத்தாமல் இருந்ததால் மேற்படி பூபதி மேலும் ரூபாய் 1,00,000 / - அசல் மற்றும் ரூபாய் .18,000 / -கந்துவட்டி கேட்டு மிரட்டியுள்ளார். இது தொடர்பாக சந்தானம் 13.06.2022 அன்று கொடுத்த புகாரை பெற்று சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி கந்துவட்டி குற்றத்தில் ஈடுபட்ட நான்கு பேரின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி தங்களது புகார்களை காவல்துறையினரிடம் தெரிவிக்கலாம் எனவும், இது போன்று கந்துவட்டி வசூல் செய்பவர்கள் மீது உடனடியாக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் M.சுதாகர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu