காந்தி ஜெயந்தியையொட்டி சாம்சங் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
போராட்டம் நடத்தி வரும் சாம்சங் தொழிலாளர்கள் மத்தியில் பேசிய தொழிற்சங்க செயலாளர் முத்துக்குமார்.
சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தின் 23 ஆம் நாளான இன்று காந்தி ஜெயந்தியையொட்டி அகிம்சை வழியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ளது சாம்சங் தொழிற்சாலை. இங்க 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் ஊதிய உயர்வு தொழிற்சங்க அங்கீகாரம் 8 மணி நேர பணி வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. காஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தில் 900க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்ட நிலையில் காவல்துறை கைது செய்து இரவு 9 மணிக்கு வெளியில் அனுப்பினர்.மேலும் இவர்கள் மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தின் 23ஆம் நாளான இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி இன்று மாலை வரை ஈடுபட உள்ளதாகவும், திமுக அரசு தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வரும் நிலையில் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும், காவல்துறையின் மூலம் அடக்கு முறையை கையாளும் போக்கினையும் வன்மையாக கண்டிப்பதாக சிஐடியு மாநில தொழிற்சங்க செயலாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu