பாலாறு மேம்பால சாலையில் பள்ளங்களை சீரமைத்த நெடுஞ்சாலைத்துறை

காஞ்சிபுரம் ஓரிக்கை பாலாறு மேம்பாலத்தில் ஏற்பட்ட சேதங்களை சரி செய்த நெடுஞ்சாலைத் துறையினர்.
காஞ்சிபுரம் மாநகரையொட்டி ஓரிக்கை மற்றும் செவிலிமேடு பகுதிகளின் அருகே பாலாறு பாய்ந்து ஓடுகிறது. இதனைக் கடக்க தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்கிறது.
இந்நிலையில் ஓரிக்கை அடுத்த பாலாற்று மேம்பாலத்தில் அதிகளவு கனரக வாகனங்கள் சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கான கட்டுமான பொருட்களை ஏற்றி செல்வதால் சாலைகள் சேதம் அடைவதாக தொடர் புகார் எழுந்து வந்தது.
இதில் குறிப்பாக ஓரிக்கை பாலாறு மேம்பாலத்தில் ஆங்காங்கே சிறு சிறு குழிகள் மற்றும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாலும், பாலத்தின் கட்டுமானம் கம்பி தெரியும் அளவிற்கு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் பணி முடிந்து திரும்பும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதில் சிக்கும் நிலையும், அதனால் விபத்துகளில் உடல் உறுப்புகள் மற்றும் உயிருக்கே அபாயம் ஏற்படும் நிலையை தவிர்க்க உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதனை செப்பனிட்டு தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதில் கவனம் கொண்ட காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக அப்பகுதியில் சென்று பாலாறு மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள சிறு சிறு பள்ளங்கள் மற்றும் விரிசல்கள் இடையே தார் மற்றும் பல்வேறு கட்டுமான பொருட்களைக் கொண்டு அதனை செப்பன்னிட்டு விபத்து நடக்கா வண்ணம் அதனை சீர் செய்து உள்ளனர்.
இதே போல் பாலாறு பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சீரமைத்து வாகன ஓட்டிகள் அச்சமின்றி செல்லவும், விபத்தில்லா காஞ்சிபுரம் மாவட்டத்தை உருவாக்க நெடுஞ்சாலைத்துறை உதவ வேண்டும் என்பதே அனைவரும் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu