மாநகராட்சி குறை தீர் சேவை மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்ப
மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணான 1800 425 2801 அறிமுகப்படுத்தினர்
காஞ்சிபுரம் பெருநகராட்சி கடந்த ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியானது. 51 வார்டுகளை உள்ளடக்கிய மாநகராட்சி நாள்தோறும் பல லட்சம் டன் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் கையாண்டு வருகிறது.மேலும் குடிநீர், பாதாள சாக்கடை, தெருவிளக்கு , சாலை வசதி உள்ளிட்டவைகள் குறித்த குறைகளை தெரிவிக்க திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இதில் மேயர் மற்றும் துணை மேயர் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மனுவாக அளித்து தீர்வு கண்டு வருகின்றனர்.
அவ்வகையில் தற்போதைய விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப காஞ்சிபுரம் மாநகராட்சி பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க கட்டணம் இல்லா தொலைபேசி எண் இன்று முதல் அறிவிக்கப்பட உள்ளது.இதனை இன்று மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணான 1800 425 2801 அறிமுகப்படுத்துகின்றனர்.இதில் தெரிவிக்கப்படும் புகார்கள் போதுமா மூணு போதுமான சுகாதார பிரிவு , பொறியியல் பிரிவு, நகர அமைப்பு பிரிவு ஆகிய துறைகளுக்கு தெரிவிக்கப்பட்டு தீர்வு காணப்பட்ட பின்னர் இது குறித்த தகவல் புகார்தாரருக்கு தெரிவிக்கப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu