கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு இல்லை: இந்திய மருத்துவ சங்கம்

கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு இல்லை: இந்திய மருத்துவ சங்கம்
X

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இந்திய மருத்துவச் சங்கங்கத்தின் காஞ்சிபுரம் கிளையின் சார்பில் கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து சங்கத் தலைவர் அரவிந்த் பேசியதாவது,


இந்தியாவில் கோவாக்ஸின், கோவிட்ஷீல்ட் என இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இரண்டுமே பாதுகாப்பானவையாகும். நாற்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஒரு சிலருக்கு மட்டும் லேசான தலைவலி, காய்ச்சல் போன்ற பக்க விளைவுகளே ஏற்படுகின்றன.

தடுப்பூசியால் தீவிர பக்க விளைவுகள் எதுவும் இதுவரை இந்தியாவில் ஏற்பட வில்லை. சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்ட போது ஒரு சில நாட்கள் தடுப்பூசி நிறுத்தப்பட்டு, அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டதும் உண்மைதான். நவீன மருத்துவத்தில் புது மருந்துகள் பயன்படுத்தும் போது இத்தகைய விசாரணைகள் வருவதும் உண்டு. பக்க விளைவுகள் மருந்தினால் ஏற்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

நிகழ்ச்சியின் முன்னதாக விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியை காஞ்சிபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் கௌரி,நெடுஞ்செழியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள், மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் ஆகியோருக்கும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!