பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறோம்.. புதிய கல்குவாரி வேண்டாம்! - விவசாயிகள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், ஆட்சியர் கலைச்செல்விமோகன் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது.

பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறோம் புதிய கல்குவாரிகளுக்கு அனுமதி தர வேண்டாம் என பல விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மாதாந்திர விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் , வேளாண் துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் மற்றும் தற்போதைய விவசாய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

இதை தொடர்ந்து தாலுக்கா வாரியாக விவசாயிகள் இடமிருந்து குறைகள் கேட்கப்பட்டது. இதில் வாலாஜாபாத் வட்டம் மற்றும் உத்திரமேரூர் வட்டங்களில் புதியதாக 18 கல் குவாரிகளுக்கு அனுமதி அளித்து உள்ளதாக அறிந்த விவசாயிகள் பல தங்கள் பகுதி விவசாய அழிவுக்கு கல்குவாரிகளே காரணமாக இருக்கும் நிலையில், புதிய குவாரிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என பாதம் தொட்டு கேட்டுக் கொள்வதாக விவசாயிகள் வருத்தத்துடன் பலர் தெரிவித்தனர்.


மேலும் தங்கள் மனுக்களின் மீது உரிய பதிலளிக்க அரசு அலுவலர்கள் காலம் தாழ்த்தி வருவதாகவும் இரு மாதங்கள் பின் நடைபெறும் கூட்டங்களில் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பதில் அளிக்கின்றனர் என குற்றம் சாட்டினர்.

மேலும் மாடுகள் பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பயிர்களை நாசம் செய்வதால் அதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் கிராமங்களில் கால்நடை வளர்ப்போர் அரசு விதிகளை பின்பற்றாமல் கால்நடைகளை உலவ விடுவதால் பயிர்களை நாசம் செய்வதால் அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.


இதற்கு பதில் அளிக்க ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் பண்டைய காலங்களில் கிராமங்களில் பவுண்டு என்று திட்டமிருந்த நிலையில், தற்போது அதேபோல் ஊராட்சிகளில் தற்போது நடைபெற திட்டமிட்டுள்ளதால், இதன் மூலம் அபராதம் விதித்தல் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இறுதியாக விவசாயிகள் அனைவரும் அரசின் நல திட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா