காஞ்சிபுரத்தில் புதிய பட்டு சேலை விற்பனை நிலையம் திறப்பு
காஞ்சிபுரத்தில் புதிய பட்டு சேலை விற்பனை நிலையத்தினை பிரபல இசையமைப்பாளர் மனைவி சுமா ஹாரிஸ்ஜெயராஜ் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்த போது. உடன் நிறுவனர் எஸ் கே பி கோபிநாத்.
காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து தேவதை போல் நீ நடந்து வரவேண்டும் எனும் சினிமா பாடல் வரிக்கு ஏற்ப தற்போது காஞ்சிபுரம் பட்டிற்கு ஆசைப்படாத பெண்களே உலகத்தில் இல்லை என கூறலாம்.
தங்கள் வீட்டு விசேஷ வைபவங்களுக்கு உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் காஞ்சி பட்டை நிகழ்வுககு கொடுத்த தங்களுக்கு காஞ்சி பட்டே வேண்டும் என கூறும் காலம் தற்போது உள்ளது.
இந்நிலையில் தற்போதைய நகர நாகரிகத்திற்கு ஏற்ப இளம் மங்கைகளும் தங்கள் விரும்பும் வண்ணங்களும் வடிவமைப்புகளும் ஒருங்கிணைந்து பட்டு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் அவர்களும் தற்போது வரை எல்லையில்லா மகிழ்ச்சியுடன் பட்டை உடுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பட்டு சேலை விற்பனையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது.
அவ்வகையில் காஞ்சிபுரம் பிரபல பட்டு வணிக நிறுவன குழுமமான எஸ்.கே.பி நிறுவனம், காஞ்சிபுரம் காந்தி சாலையில் தனது புதிய கிளைகளை இன்று துவங்கியது.
துவக்க விழா நிகழ்வின் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மனைவியும், பிரபல தொழிலதிபருமான சுமாஹாரிஸ் ஜெயராஜ் குத்துவிளக்கு ஏற்றி புதிய விற்பனை நிலையத்தினை தொடங்கி வைத்தார்.
மேலும் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டு சேலைகளின் பார்வையிட்டு அது குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையம் குறித்து உரிமையாளர் எஸ் கே ப கோபிநாத் கூறுகையில் , காஞ்சி பட்டு என்றாலே விரும்பாத பெண்கள் இல்லை எனவும், தற்போதுள்ள சூழ்நிலையை காஞ்சி பட்டு விற்பனையை முழு தரத்துடன் உத்தரவாதம் அளித்து விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
மேலும் இளம் பெண்கள் விரும்பும் வண்ணங்களும், வடிவமைப்புக்கு ஏற்ற வகையில் சேலை நெய்தும் தரப்படும். பட்டு நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முழுமையான தரமான பட்டினை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு அளித்து அவர்களின் மகிழ்ச்சியும் அதேபோல் சேலை நெய்யும் நெசவாளர்களின் வாழ்வை சிறப்பாக்கும் வகையில் இந்த நிறைவு நாம செயல்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு காஞ்சி முக்கிய பிரமுகர்கள், பட்டு சேலை உரிமையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu