காஞ்சிபுரம் அருகே புதிய வழித்தட பேருந்தினை ஆரத்தி எடுத்த பொதுமக்கள்
தமிழ் வழியாக புதிய வழித்தட பேருந்தனை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஒன்றிய செயலாளர் பி எம் குமார், பொதுக்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார்
New Bus Route Inauguration
கடந்த சில தினங்களுக்கு முன்பு சுற்றுச்சூழலை காக்கும் வண்ணம் புதிய நூற்றுக்கணக்கான BS 6 ரக பேருந்துகளை தமிழக முதல்வர் சென்னையில் துவக்கி வைத்தார்.குறிப்பாக பேருந்துகள் இல்லாத கிராமங்களை இணைத்து புதிய வழித்தடத்தை உருவாக்கி இதை செயல்படுத்தவும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
New Bus Route Inauguration
புதிய வழித்தட பேருந்து நிலையம் துவக்கி வைத்து பொதுமக்களிடம் உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்.
அவ்வகையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் கடந்த இரண்டு நாட்களாக பேருந்துகள் மிகக் குறைவாக உள்ள பகுதிகளை கண்டறிந்து பெருநகரங்களினை இணைக்கும் வகையில் புதிய வழித்தடங்களை துவக்கி வைத்தார்.அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இரு ஒன்றியங்களில் வழியாக பூந்தமல்லிக்கு செல்லும் பேருந்து வழித்தடத்தினை தாமல் பகுதியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்தார்.
மேலும் இப்பேருந்தில் பயணித்து முசரவாக்கம், மேல்ஓட்டிவாக்கம் , கீழம்பி உள்ளிட்ட பகுதிகள் வழியாக புதிய பேருந்து வருவதை கண்ட பெண்கள் அதிக அளவில் ஆர்வமுடன் ஆரத்தி மற்றும் திருஷ்டிகள் கழித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.கீழம்பி பகுதியில் இருந்த பெண்களுடன் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் புதிய வழித்தடத்தில் பகுதிகள் குறித்து விளக்கி எடுத்துரைத்தார்.
New Bus Route Inauguration
புதிய வழித்தட பேருந்து சேவைக்கு ஆரத்தி எடுத்த கீழம்பி பொதுமக்கள்.
புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கியதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பேருந்தில் பயணித்தார்.கடந்த மூன்று தினங்களில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இணைக்கும் வகையில் பூந்தமல்லிக்கு புதிய வழித்தட பேருந்துகளை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu