உத்திரமேரூர் அரசு பள்ளிக்கு ரூ 63.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம்

உத்திரமேரூர் அரசு பள்ளிக்கு ரூ 63.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம்
X

உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணியை சுந்தர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிடம் பணியை சுந்தர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

உத்திரமேரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 63.5 லட்சம் மதிப்பிலான புதிய கூடுதல் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் பணிகளை துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1300க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கல்வி கற்க போதிய வகுப்பறைகள் இல்லை எனவும் , பழைய கட்டிடங்கள் சேதம் அடைந்து வருவதாகவும் இதற்கு மாற்றாக புதிய கூடுதல் கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும் என பள்ளி சார்பில் கோரிக்கை எழுந்தது.


இந்நிலையில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் எடுத்த முயற்சியினால் நபார்டு வங்கி திட்டத்தின் 28ன் கீழ் கட்டிடம் கட்டும் பணிக்கு ரூபாய் 63 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான அரசாணை பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டது.

பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்படும் இக்கட்டிடம் தரை தளம் மற்றும் முதல் தளம் என 2914 சதுர அடியை கொண்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் பணி இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் பணிகளை துவக்கி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.


இக்கட்டிடத்தில் மொத்தம் மூன்று வகுப்பறைகள் அமைய உள்ளது. துவக்க விழா நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூராட்சி தலைவர் சசிகுமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரவி, பேரூர் செயலாளர் பாரிவள்ளல் , தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

கடந்த மாதம் பெய்த மழையின்போது பழைய கட்டிடத்தில் இயங்கும் ஒரு வகுப்பறையில் மேற்கூரை பூச்சு பள்ளி விடுமுறை நாளில் விழுந்தது. இந்நிலையில் இந்த புதிய கட்டிடம் மாணவிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?