பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு : தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். இந்திய இசை உலகில் தனது இனிய குரலால் தனி ராஜ்ஜியம் நடத்திய லதா மங்கேஷ்கர், இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பத்ம விபூஷன், தாதா சகேப் பால்கே, பாரத் ரத்னா உள்ளிட்ட பல்வேறு கவுரவங்களை அவர் பெற்றுள்ளார்.
லதா மங்கேஷ்கரின் இறுதி சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என மராட்டிய மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மேலும் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் எனவும், நாடு முழுவதும் இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு அவரது மறைவிற்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu