எம்.சாண்ட் விற்பனை நிறுத்தம்: கட்டுமான தொழில் பாதிக்க வாய்ப்பு

காஞ்சிபுரம் அடுத்த ஆர்பாக்கம் பகுதியில் எம்-சாண்டிற்க்காக காத்திருக்கும் லாரிகள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆற்றுப் படுகையில் மணல் அள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் கட்டுமான தொடர்பான பணிகளுக்கு எம்சாண்ட் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எம் சாண்ட் அரவை நிலையங்களிலிருந்து விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கான உரிய பில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அனுமதி பெற்ற பின்பே எடுத்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் உரக்கடம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது எம்சாண்ட் ஏற்றி வந்த லாரிகள் உரிய ஆவணங்கள் இல்லை , அதிக பாரம் என பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை யினர் உரிய நடைமுறைகளை பின்பற்ற கல்லரவை நிலையங்கள் மற்றும் தனியார் லாரி உரிமையாளர்களுக்கு உரிய கட்டுப்பாடுகளை வரன்முறை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறி இன்று முதல் எம்சாண்ட் விற்பனையை நிறுத்தி உள்ளது. இதனால் கட்டுமான தொழிலுக்கு சிறிது பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu