ஊராட்சி செயலர் பதவிகளை நிரப்புவது எப்போது? ஊராட்சி செயலர்கள் எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் , உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இதன் கீழ் மொத்தம் 124 கிராம ஊராட்சிகள் செயல்பட்டு வருகிறது. கிராம ஊராட்சிகளில் குடிநீர் தேவைகள், சாலை வசதி மேம்பாடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் பணிகள், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் , இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டம் , பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் மற்றும் கிராம அடிப்படை வசதிகளை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு புள்ளி விவரங்கள் உடன் தெரிவிக்கும் பணியினை கிராம ஊராட்சி செயலர்கள் செய்து வருகின்றனர்
இது மட்டுமில்லாமல் கிராம வீடுகளில் குடிநீர் வீட்டு வரி மற்றும் தொழில் வரி உள்ளிட்டவைகள் வசூல் செய்யும் பணியினையும் தற்போது அனைவருக்கும் குடிநீர் எனும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகின்றனர்.
கிராம ஊராட்சி செயலர்கள் நாள்தோறும் சில குறிப்பிட்ட பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு புள்ளிவிவரம் உடனே தகவல் தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் செயலர் பதவி காலியாக உள்ளது. பல்வேறு கிராமங்களில் செயலாளராகப் பணி புரிபவர்கள் கூடுதலாக இப்பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 5 கிராம ஊராட்சி செயலர்கள் பணியிடம் நிரப்பப்பட ஊராட்சிகளில் செயல்படும் ஊராட்சி செயலர்கள் இதை கூடுதலாகவும் கவனித்து வருகின்றனர்.
வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 6 ஊராட்சி செயலர்கள் கூடுதலாக மற்றொரு கிராம ஊராட்சிகளிலும் பணிகளை கவனித்து வருகின்றனர்.
சாதாரணமாகவே தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர் குற்றச்சாட்டில் இருந்து வரும் நிலையில் பணித்தள பொறுப்பாளர்களுக்கு புள்ளிவிவரங்களை ஊராட்சி செயலர்கள் அளித்து வருகின்றனர்.
இதன்பின் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கும் நேரங்களில் பல்வேறு ஊராட்சிகளை கடந்த ஆண்டுகளில் பல்வேறு நபர்களுக்கு கூடுதல் பணி ஒதுக்கி அதற்கான ஊதியம் வழங்கப்பட்டு தற்போது அதனை திரும்பப் பெறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இது போன்ற நிலைகளை கலைய கடந்த இரண்டு ஆண்டுகளாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணி இடங்களை நிரப்ப வேண்டும் எனவும் கூடுதல் பணிச் சுமைகளால் மன உளைச்சல் அதிகமாக ஏற்படுவதாகவும் கிராம ஊராட்சி செயலர்கள் தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu