வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வயநாடு சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மழை வெள்ள மண் சரிவில் சிக்கி உயிர்நீர்த்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.பாதிக்கப்பட்டவர்களும் விரைந்து நலம் பெற வேண்டி காமாட்சி அம்மனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மழை வெள்ள இயற்கை பேரிடர் மண் சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து உள்ளனர்.
இந்த இயற்கை பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரியார் ஜெகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வ வேண்டுகோளின் படி கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தின் கிழக்கு கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
மேலும் நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சீக்கிரம் நலமடைய வேண்டியும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu