அண்ணா நினைவுநாள்: எம்எல்ஏ எழிலரசன் மரியாதை செலுத்தினார்

அண்ணா நினைவுநாள்: எம்எல்ஏ எழிலரசன் மரியாதை செலுத்தினார்
X

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்எல்ஏ எழிலரசன் 

அண்ணாவின் 53வது நினைவு தினத்தையொட்டி அவரது இல்லத்தில் உள்ள திருஉருவ சிலைக்கு எம்எல்ஏ எழிலரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தமிழக முன்னாள் முதல்வரும் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினத்தையொட்டி காஞ்சிபுரத்திலுள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், மாநில மாணவரணி செயலாளருமான எழிலரசன் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின் அங்குள்ள குறிப்பேட்டில், திராவிடத்து லெனின், தென்னாட்டு காந்தி, பேரறிஞர் அண்ணா நினைவு நாளில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு கழக தலைவர் தளபதி அவர்கள் நல்லாட்சி எந்நாளும் அண்ணா வழியில் நடைபெறும் எனவும் திராவிட மாடல் ஆட்சி என சூளுரைப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வின் போது ஒன்றியக்குழு உறுப்பினர் பிரசாத், திமூக மகளிரணியினர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!