பல்வேறு ஊராட்சிகளில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை திறந்து வைத்த எம்எல்ஏ

பல்வேறு ஊராட்சிகளில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை திறந்து வைத்த எம்எல்ஏ
X

புத்தேரி ஊராட்சியில் கட்டப்பட்ட காரிய மண்டபக் கட்டிடத்தினை திறந்து வைத்த எம்எல்ஏ எழிலரசன், ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ்.

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் , சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி, ஒன்றிய பொது நிதி, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என பலவற்றிற்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் ரூ1.22 கோடி மதிப்பீட்டில் நியாய விலைக் கட்டிடம், அங்கன்வாடி மையம் , மேல்நிலை நீர்தேக்க தொட்டி என கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, தேசிய ஊரக வேலைவாய்ப்பு நிதி, ஒன்றிய பொது நிதி என பல்வேறு நிதிகளின் கீழ் நியாய விலை கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, காரிய மண்டபம் என 9 பணிகள் ரூ 1.22 கோடி மதிப்பீட்டில் நிறைவுபெற்றது .

கீழ்கதிர்பூர் ஊராட்சியில்

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 18.10 இலட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக் கடை கட்டிடம்,

திருப்பருத்திகுன்றம் ஊராட்சியில் ஒன்றிய பொது நிதி ரூ13.37 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டிடம்,

புத்தேரி ஊராட்சியில்

ஒன்றிய பொது நிதி ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் காரிய மண்டபம் ,

திம்மசமுத்திரம் ஊராட்சியில்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியிலிருந்து ரூபாய் 9.6 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுயஉதவி குழு கட்டிடம்,

சித்தேரிமேடு ஊராட்சியில்,

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியில் ரூபாய் 13.57 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம்,

மேல்பங்காரம் ஊராட்சியில்

AGAMT II நிதி ரூ 12.30 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை கட்டிடம்,

திருப்புட்குழி ஊராட்சியில்

AGAMT II நிதி ரூ13.37 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம்,

மேல்ஒட்டிவாக்கம் ஊராட்சியில்

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல் நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 15.25 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கட்டிடம் என அனைத்தையும் இன்று சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கோமளா, ஒன்றிய குழு உறுப்பினர் ரேகாஸ்டாலின் , ஊராட்சி மன்ற தலைவர்கள் ரமேஷ் திலகவதி, மலர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story