காஞ்சிபுரத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் எம்.எல்.ஏ.ஏழிலரசன் ஆய்வு

காஞ்சிபுரத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் எம்.எல்.ஏ.ஏழிலரசன் ஆய்வு
X

காஞ்சிபுரம் நகரில் தேங்கி நின்ற மழை நீரை அப்புறப்படுத்த ஆலோசனை கூறி அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டார் எழிலரசன் எம். எல். ஏ.

காஞ்சிபுரம் நகரில் மழைநீரால் தேங்கிய பகுதிகளில் எம்.எல்.ஏ.ஏழிலரசன் ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து துவங்கி தற்போது வரை தீவிரமாக பெய்து வருகிறது.

சென்னை வானிலை மண்டலம் அறிவித்த மாவட்டங்களில் காஞ்சிபுரம் மாவட்டம் ரெட் அலர்ட் என எச்சரித்து. இதனைத் தொடர்ந்து பேரிடர் மேலாண்மை துறை காஞ்சிபுரம் மாவட்டம் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவுறுத்தியது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் 53 மில்லி மீட்டர் ஸ்ரீபெரும்புதூரில் 65.4 மில்லி மீட்டர் உத்திரமேரூர் 78 மில்லி மீட்டர் வாலாஜாபாத்தில் 45.6 மில்லி மீட்டர் செம்பரம்பாக்கம் பகுதியில் 71.4 மில்லி மீட்டர் குன்றத்தூரில் 49 மில்லி மீட்டர் என மொத்தம் 362.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 50 ஏரிகள் முழு கொள்ளளவையும் 43 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும் 150 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் நிரம்பி உள்ளது.

இது மட்டும் இல்லாமல் நேற்று முழுவதும் பெய்த மழை காரணமாக மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட வெள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாநகராட்சி ஆணையருடன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் நகரில் பாலியர்மேடு, தாமல்வார் தெரு , ஜெம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் சி. வி. எம். பி. எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், ஆணையர் கண்ணன் மற்றும் பொறியாளர் கணேசன் ஆகியோர் கொண்ட குழுவுடன் ஆய்வு மேற்கொண்டு குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் நீர்களை டிராக்டர் மோட்டார் மூலம் நீரை உறிஞ்சவும் அருகில் உள்ள மழை நீர் தொட்டிக்கு செல்லும் வகையில் பணி மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

மேலும் குடியிருப்பு பகுதியில் நீர் தேங்கி இருந்தால் உடனடியாக செயல்பட்டு பொதுமக்களை காக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.மேலும் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, மழைக்காலங்களில் காய்ச்சியை குடிநீரை பருகவும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பகுதி தி.மு.க. செயலாளர் கே. திலகர் , சு. வெங்கடேசன், எஸ். வி. பிரகாஷ் , பி சுரேஷ் , நெடுஞ்சாலை துறை உதவி இயக்குநர் பெரியண்ணன் , உதவி பொறியாளர் விஜய் , மாநகராட்சி உதவி பொறியாளர்கள் உலகநாதன் , சரவணன் , பன்னீர்செல்வம், வருவாய் அலுவலர்கள் தேவராஜ் தாஸ் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் ஆய்வின் போது உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai solutions for small business