காஞ்சிபுரத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்த எம் எல் ஏ எழிலரசன்
புதிய நியாய விலை கடை கட்டிடத்தை திறந்து வைத்து பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ எழிலரசன்.
தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது தொகுதிக்கு தேவையான பல திட்டங்களை தங்களது தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுவது வழக்கம்.
அவ்வகையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கடந்த நான்கு ஆண்டுகளாக தனது தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நியாய விலை கடை மேல்நிலை குடிநீர் திறக்க தொட்டி பள்ளி வகுப்பறை கூடுதல் கட்டிடங்கள் அங்கன்வாடி மையங்கள் என பல முக்கியத்துவம் வாய்ந்த பணிகளுக்கு அதிக அளவில் விருப்பத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்.
அவ்வகையில் ஏற்கனவே தாமல் ஊராட்சியில் ரூ. 18.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி இருந்த நிலையில் அப்பணி நிறைவுற்று இன்று மக்கள் பயன்படுத்துவதற்காக திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அரிசி ,சர்க்கரை ,பாமாயில் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
இதேபோல் ஊராட்சியில் குடிநீர் பஞ்சம் நிலவாமல் இருக்க ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க ரூபாய் 40 லட்சம் ஒதுக்கீடு செய்து அப்பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மேல்கதிர்பூர் ஊராட்சியில் 10 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தையும் திறந்து வைத்தார்.
மேற்கண்ட 3 பணிகள் நிறைவுற்ற நிலையில் அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த நிலையில் மேலும் ரூபாய் 35.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
அவ்வகையில் நரப்பாக்கம் பகுதியில் ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடம் மற்றும் திருபருத்திகுன்றம் ஊராட்சியில் இளைஞர் உடற்பயிற்சி கூடம் ரூபாய் 17.5 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள நிலையில் அதற்கான அடிக்கல் நாட்டில் பணிகளை துவக்கி வைத்தார்.
சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் நிறைவுப் பணிகளும் , துவக்க பணிகளும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் திமுக ஒன்றிய செயலாளர் பி.எம் ,குமார், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu