நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார் சாலை பணி: எம்.எல்.ஏ மற்றும் மேயர் துவக்கி வைத்தனர்
நாற்பத்தி நான்காவது வார்டு பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ எழிலரசன் மற்றும் மேயர் மகாலட்சுமி யுவராஜ்
51 வார்டுகளை கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மக்களின் அடிப்படை வசதிகள் என குடிநீர் , சாலை மற்றும் பாதாள சாக்கடை திட்டம், சாலை தெரு விளக்குகள் உள்ளிட்ட மக்கள் நிலை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வகையில் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் துணை மேயர் குமரகுருநாதன் தலைமையில், ஆணையர் கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.
இதில் மக்கள் நலப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு 63 தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. இதில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதி மற்றும் விரிவாக்க பகுதிகளில் மக்களின் போக்குவரத்து வசதிக்காக தார் சாலை அமைக்கும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் 2022 - 23 ன் கீழ் பல்வேறு வார்டு பகுதிகளில் பணிகள் நடைபெற தீர்மானிக்கப்பட்டது.
அவ்வகையில் 44 வது பாரதியார் தெருவில் மாமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் மேயர் மகாலட்சுமி யுவராஜ் கலந்து கொண்டு புதிய தார் சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மேலும் அப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அப்பகுதி பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயருக்கு கோரிக்கை மனுக்கள் அளித்து அது குறித்து அங்கு அவர்களுக்கு விளக்கப்பட்டது.
இதேபோல் 13வது வார்டு பகுதியில் கார்த்தி மேடு ஆறாவது குறுக்குத் தெருவில் மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் எம்எல்ஏ , மேயர் ஆகியோர் கலந்து கொண்டு புதிய தார் சாலை அமைக்கும் பணி இணையும் துவக்கி வைத்தனர்.
ஐம்பதாவது வார்டு பகுதியான ஐஸ்வர்யா நகர் மற்றும் அண்ணா தெரு ஆகிய இரு பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணி மாமன்ற உறுப்பினர் கயல்விழி சூசை தலைமையில் எம்எல்ஏ மற்றும் மேயர் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.
50 வது வார்டு பகுதியான அண்ணா தெருவில் நடைபெற்ற விழாவில் மாமன்ற உறுப்பினர் சங்கர் முன்னிலையில் எம் எல் ஏ மற்றும் மேயர் கலந்து கொண்டு புதிய தார் சாலை பணிகளை துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் புதிய விரிவாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்களின் போக்குவரத்து சேவைகளுக்காக இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu