காஞ்சிபுரத்தில் இளம் பெண்கள் மாயம்..!

இளம் பெண்கள் மாயம் (கோப்பு படம்)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த செய்தி அறிக்கை வெளியிடப்பட்டது.ச
சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலுர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மனைவி பொன்னம்மாள் சற்று மன வளர்ச்சி குன்றிய நிலையில் கடந்த 28-ம் தேதி முதல் காணவில்லை என சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், வடமங்கலம் ஏரியில் மூழ்கி இறந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதேபோல் , களக்காட்டூர் பகுதியை சேர்ந்த அலமேலு என்பவரின் மகள் ஜெயலட்சுமி காஞ்சிபுரம் பச்சையப்பா சில்க்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் , திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஜி எச் அழைத்து சென்று மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்து ஸ்நாக்ஸ் வாங்கி வருவதாக கூறி சென்ற ஜெயலஷ்மி காணவில்லை என சிவகார்த்திகேயன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதே போல் தாமல் கிராமத்தை சேர்ந்த சத்யா என்பவரின் மகளான காயத்ரி காஞ்சிபுரம் பச்சையப்பா் மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி வேதியல் இரண்டாம் ஆண்டு படித்துவிட்டு படிப்பை பாதியில் நிறுத்தி வீட்டில் இருந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி தனது வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என பாலு செட்டி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட ஆதம்பாக்கம் பகுதியில் சதீஷ் என்பவர் கிரஷர் நடத்தி வருகிறார். வழக்கம்போல் பணி முடித்துவிட்டு வீடு திரும்பி மறுநாள் காலை கிரஷ் இருக்கு சென்ற போது அங்கு வைக்கப்பட்டிருந்த 20 கிலோ காப்பர் பிளேட் பேட்டரி மற்றும் ஆன்டி வெல்டிங் மிஷின் என 57 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடி சென்றது தெரிய வந்தது தொடர்ந்து உத்திரமேரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் அங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவர் இச்செயலில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தி ஒரு கண்ணோட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள்: ஒரு பார்வை
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையால் சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட சில முக்கிய வழக்குகள் குறித்த செய்தித் தொகுப்பு
காணாமல் போனவர்கள்:
- சுங்குவார்சத்திரம் அருகே சந்தவேலுர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்மாள், மன வளர்ச்சி குன்றிய நிலையில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், அவர் வடமங்கலம் ஏரியில் மூழ்கி இறந்தது கண்டறியப்பட்டது.
- களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி, பச்சையப்பா சில்க்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஜி.எச். அழைத்து செல்லப்பட்ட ஜெயலட்சுமி, ஸ்நாக்ஸ் வாங்கி வருவதாக கூறி சென்றார். ஆனால், அவர் காணாமல் போனதாக சிவகார்த்திகேயன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
- தாமல் கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி, பச்சையப்பா மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி வேதியல் படித்து வந்தார். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தவர், எட்டாம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை என பாலு செட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருட்டு:
உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட ஆதம்பாக்கம் பகுதியில் சதீஷ் என்பவர் நடத்தி வந்த கிரஷரில் இருந்து 20 கிலோ காப்பர் பிளேட் பேட்டரி மற்றும் ஆன்டி வெல்டிங் மிஷின் என 57 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனதாக புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், அங்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவர் திருட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையின் செயல்பாடு:
- காணாமல் போனவர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளியை காவல்துறையினர் விரைவாக கைது செய்தனர்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்:
- தங்கள் குழந்தைகள், உறவினர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்.
- சந்தேகத்திற்கிடமான நபர்கள், வாகனங்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu