உத்திரமேரூர் ஓன்றியங்களில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

உத்திரமேரூர் ஓன்றியங்களில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
X

சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார் ஏற்பாட்டின் பேரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா எம்எல்ஏ சுந்தர் தலைமையில் கொண்டாடப்பட்ட போது.

நவம்பர் 27ம் தேதி தமிழக இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

உத்திரமேரூர், சாலவாக்கம் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 46வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 46கிலோ எடையுள்ள பிரமாண்டமான கேக்கை வெட்டி கொண்டாடி பொதுமக்களுக்கு உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் வழங்கினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், சாலவாக்கம் பகுதியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் திமுக சார்பில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 46 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு 46 கிலோ எடையுள்ள பிரமாண்டமான கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர்கள், ஞானசேகரன், குமார் தலைமையிலும், உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் சசிகுமார், சாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல் முன்னிலையிலும் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் பங்கேற்று பொதுமக்களிடையே சிறப்புரை ஆற்றினார்.

பின்னர், பிரமாண்டமாக தயாரித்து வைக்கப்பட்டு இருந்த 46 கிலோ எடையுள்ள கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். இதில், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் வரும் 27 ஆம் தேதி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

தற்போது இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ள நிலையில் தமிழக முழுவதும் இது குறித்த இரு சக்கர வாகன விழிப்புணர்வு நடைபெற்று வரும் நிலையில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!