காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
X

இடைநிற்றல் கல்வி மாணவர்களின் நிலை குறித்து ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து கல்வி திட்டங்களையும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், சின்ன காஞ்சிபுரம் மற்றும் ராணி அண்ணாதுரை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ,மாவட்ட கல்வி திட்ட அலுவலகம் உள்ளிட்டவைகளில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசுடன் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதன்பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளரிடம் பேசுகையில், பள்ளி மாணவர்களின் ஒருங்கீனம் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் அதற்கான நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு, பள்ளி மாணவர்களை குற்றம் சொல்வதைக் காட்டிலும் ,கண்டிப்பதைக் காட்டிலும் உரிய அறிவுரைகள் உரிய திட்டங்களைத் தீட்டுவதுதான் அரசாங்கத்தின் கடமை.


தவறுகளை தெரிந்து செய்யும் பிள்ளைகளும்,தெரியாமல் செய்யும் பிள்ளைகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் பாதிப்படைய கூடாது என்ற நோக்கில் உணர்வுகள் மேம்பட தனியாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.ஆசிரியர்கள் மூலமாக கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் 44 ஒன்றியங்கள் கண்டறியப்பட்டு , அப்பகுதியில் உள்ள பிள்ளைகளுக்கு தேவையான கையேடு வழங்கி ஆசிரியர்களையும் பயிற்றுவிக்கப்பட்டு இதன்மூலம் 2.50 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றனர். இந்த திட்டத்தை கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்த ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உள்ளிட்ட கல்வி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers