Kanchipuram New Bus Stand-காஞ்சிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அமைச்சர் அன்பரசன் ஆய்வு

Kanchipuram New Bus Stand-காஞ்சிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க  அமைச்சர் அன்பரசன் ஆய்வு
X

காஞ்சிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பரிந்துரைக்கப்பட்ட இடத்தினை அமைச்சர் அன்பரசன் ஆய்வு செய்தார்.

Kanchipuram New Bus Stand-காஞ்சிபுரம் மாநகரில் புதிய பேருந்து நிலையம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைச்சர் அன்பரசன் ஆய்வு நடத்தினார்.

Kanchipuram New Bus Stand-காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வினை தமிழ்நாடு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு மேற்கொண்ட பின்பு மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தெரிவித்ததாவது:-

காஞ்சிபுரம் நகரத்தில் பெருகி வரும் மக்கள்தொகை மற்றும் போக்குவரத்து நெரிசலை சரி செய்திட புதிய பேருந்து நிலையத்தை தேசிய நெடுஞ்சாலை அருகே அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு எடுத்து சென்று, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இத்திட்டத்தினை செயல்படுத்திட ஆவணம் செய்யப்படும்.

மேலும் சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கோரிக்கைக்கிணங்க, காரைப்பேட்டை மற்றும் சித்தேரிமேடு ஆகிய பகுதிகளில் உத்தேச பேருந்து நிலையம் அமைக்க தகுதியான இடத்தினை இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இத்திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அவர்களை கலந்து ஆலோசித்து துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி,உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் .சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பில்,

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற தொழிலாளர் தினமான மே 01-ஆம் தேதி அன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.கிராம சபைக் கூட்டங்களில் கீழ்க்காணும் பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.

கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், கிராம வளர்ச்சி திட்டம் (VPDP) அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்பு திட்டம், அனைருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல்ஜீவன் இயக்கம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்கப்படும்.

மேலும், கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்திட வேண்டும். பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ்பேனர் மூலம் வரவு செலவு கணக்கு (படிவம் 30-ன் சுருக்கம்) வைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
புதுமண தம்பதிகளே..! தேனும் எள்ளும்...! நம்பவே முடியாத அளவுக்கு அற்புதங்கள்..! என்னன்னு தெரிஞ்சிக்கணுமா?