காஞ்சிபுரம் விழாவில் அண்ணா சிலைக்கு அமைச்சர் அன்பரசன் மாலை அணிவிப்பு
தமிழ்நாடு சிறு குறு தொழில் அமைச்சர் அன்பரசன் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு சிறு குறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன், ஆட்சியர், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரத்திலுள்ள அவரது நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் , எழிலரசன் , மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அங்குள்ள குறிப்பேட்டில் அமைச்சர் அன்பரசன், வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைப்போம் என உறுதி ஏற்பதாக குறிப்பேட்டில் கையெழுத்திட்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் மற்றும் நினைவகங்கள் குறித்த தகவல்கள் அறியும் வண்ணம் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்து தளத்தினை பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி விக சசிகலா அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தார். மேலும் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான சோமசுந்தரம் மற்றும் பொதுச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் அதிமுக கட்சியினர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம் , படு நெல்லி தயாளன், பகுதி செயலாளர்கள் வட்டக் கழக செயலாளர் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அதிமுக ஓபிஎஸ் சார்பில் மாவட்ட செயலாளர் ஆர் வி ரஞ்சித் குமார் தலைமையில் அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து அண்ணாவிற்கு மரியாதை செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu