காஞ்சி மாவட்ட எம் ஜி ஆர் மன்றம் சார்பில் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
காஞ்சிபுரம் மாநகர அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நடைபெற்ற எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் போது
MGR Bday -காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக , காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பூக்கடை ஆர் டி சேகர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே காந்திநகர் பகுதியில் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.
இதில் பேசிய மாவட்டச் செயலாளர் வி.சோமசுந்தரம் கூறியதாவது: புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் தமிழக மக்களுக்காக எண்ணற்ற பல திட்டங்களை அதிமுக கொண்டு வந்தது. அதனை மேலும் மெருகூட்டும் வகையில் புரட்சித்தலைவி ஜெயலலிதா தொடர்ந்து செயல்படுத்தி மேலும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தாலிக்கு தங்கம் , இளம் பெண்களுக்கு ஸ்கூட்டர் என புதிய திட்டங்களையும் அறிவித்து மக்களின் பெயர் துடைத்தது அதிமுக. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவின் செல்வாக்கை மீண்டும் நிரூபிக்க வகையில் தொண்டர்கள் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட கழக மாணவர் அணி செயலாளர் எஸ் ஆர் விஜயகுமார் , புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் அதிமுகவினர்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதாகவும், அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் இன்றளவும் பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வருவதும், அவர் அதிமுகவுக்கு மட்டுமல்லாமல் அனைத்து கட்சியினர் தேவைகளும் எவ்வித உள்நோக்கும் இன்றி செயல்படுத்தி அவர்களையும் தன் வசப்படுத்தியவர் என்பது அனைவரும் அறிந்ததே என்று கூறினார்
மேலும், இன்றளவும் கிராமப்புற மக்கள் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மறக்காமல் தனது வயது மூப்பிலும் வாக்கு சாவடியில் தைரியத்துடன் இரட்டை இலைக்கு வாக்களிப்பேன் என கூறுவது அவரின் ஆட்சி நிர்வாக திறமையும் மக்களிடம் அவர் பெற்ற அன்பையுமே எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் , கே.யு.எஸ்.சோமசுந்தரம், நகர செயலாளர் ஸ்டாலின், நகரப் பகுதி செயலாளர் பாலாஜி, ஜெயராஜ், கோல்ட் ரவி, ஒன்றிய செயலாளர் அத்திவாக்கம் ரமேஷ், காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் சேந்தன் வல்லரசு சண்முகானந்தம் புனிதா சம்பத் உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமான கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu