காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12ம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12ம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம்
X

ஆட்சியர் மா.ஆர்த்தி 

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வரும் 12ம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக, ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி முகாம் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள சுமார் 11லட்சம் பேரில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத 4லட்சம் பேருக்காக, வரும் 12ம் தேதி மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இதில், பெருநகராட்சி, பேரூராட்சி, ஓன்றிய அலுவலங்கள் சார்பில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தபடவுள்ளது . ஒவ்வொரு இடங்களிலும் குறைந்தபட்சம் 600 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் தடுப்பூசி இருப்பில் வைக்கப்பட்டு செலுத்தப்பட உள்ளது.

முதல் தவணை செலுத்தி கொள்ளாத நபர்கள், இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோய் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ளுமாறு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!