16ம் தேதி கீழம்பி கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ள மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் கூறித்த அறிவிப்பு பலகை
Mega Job Mela
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்ட செய்தி குறிப்பில்,
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 16.02.2024-ம் வெள்ளிக்கிழமை அன்று காஞ்சிபுரம் திருமலை பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனித வள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். அது சமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
எனவே, 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 16.02.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு காஞ்சிபுரம் திருமலை பாலிடெக்னிக் கல்லூரிக்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ஏதேனும் விவரங்கள் தேவை எனில் 044-27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதில் 140 பேர் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று பணி பெற்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu