காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
அறிவிப்பு பலகை ( கோப்புகள்)
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
அவ்வகையில் இந்த மாதத்திற்கான கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகள் மற்றும் பிற குறைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தெரிவிப்பார்கள்.
இது மட்டும் இல்லாது விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் விவசாய கூட்டங்களில் அளித்த மனுக்கள் குறித்த நிலைகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேரடியாக அணுகலாம். மேலும் மனுக்களுக்கான பதில்களையும் தீர்வு கண்டால் அது குறித்த தகவல்களையும் விவசாயிகளுக்கு தெரிவிப்பது வழக்கம்.
மேலும் வேளாண் துறை மற்றும் இயந்திரவியல் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் , வேளாண்மை துறை திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைப்பர். பயிர் காப்பீட்டு நிறுவனம் பயிர் காப்பீடு குறித்த விளக்கங்களையும் அளிக்கும்.
மேலும் இந்த கூட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் விவசாய கடன் , வேளாண் இயந்திர கடன்கள், விதைகள் பொறியியல் கருவிகள் என நல திட்ட உதவிகளும் வழங்கப்படும்.
நாளை காலை 10 மணிக்கு துவங்கும் இந்த கூட்டம் மதியம் ஒரு மணி வரை நடைபெறும்.
பல கூட்டங்களில் அரசு அதிகாரிகள் மாறி மாறி வருவதால் விவசாயிகளின் மனுக்கள் குறித்த நிலைகளை தெரிவிக்க இயலாத நிலையில், பல்வேறு சங்கடங்களும் இந்த கூட்டத்தில் நடைபெற்று வருவதால், உரிய அலுவலர்கள் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மனுக்களின் தற்போதைய நிலைகள் குறித்து விவசாயிகளுக்கு உரிய பதில்கள் அளிக்க வேண்டும் என கடந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
குறிப்பாக மின்வாரியம் வருவாய்த்துறை கனிமவளத்துறை கூட்டுறவு துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களும் குறித்த நேரத்தில் கூட்டத்திற்கு வர வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu