காஞ்சிபுரம் மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவருடன் மேயர் ஆய்வு

தும்பவனம் பகுதியில் கட்டப்பட்டு வரும் தனியார் மருத்துவமனை வளாகத்தினை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் மற்றும் மேயர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலுக்கு பின், மேயர், துணை மேயர் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின் மாநகராட்சி 51வார்டுகளை 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதன் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல் கல்வி குழு , நகரமைப்பு பிரிவு, வரி விதிப்பு, சுகாதாரம் என பல குழுக்களுக்கான தலைவர்கள் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் நகரமைப்பு குழு தலைவரும், மாமன்ற உறுப்பினருமான பூங்கொடி தசரதன் இன்று 49 வார்டு பகுதியான சதாவரம், தும்பவனம் பகுதிகளில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் உடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். தும்பவனம் பகுதியில் கட்டுப்பட்டு வரும் தனியார் மருத்துவமனை வளாகத்தினை மாநகராட்சி ஆணையர் நாரயணன் உடன் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கட்டிட அனுமதி, அதன் வரைபடம் உள்ளிட்டவைகளை வளாகத்தில் காட்சிபடுத்தபட வேண்டும் உரிமையாளருக்கு அறிவுறுத்தினர். இதன் நகலை, காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
அனுமதி பெறாத கட்டிடங்கள் குறித்து கண்டறிந்து முறையாக மாநகராட்சிக்கு அனுப்பி அனுமதி பெறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆணையருக்கு மேயர் மற்றும் நகர கட்டமைப்பு குழு தலைவர் கேட்டு கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu