அண்ணா போக்குவரத்து ‌தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா

அண்ணா போக்குவரத்து ‌தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா
X
காஞ்சிபுரம் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில், காஞ்சி பணிமனை முன்பு கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

உலகமெங்கும் உழைப்பாளிகளின் உழைப்பை போற்றும் வகையில் மே ஒன்றாம் நாளான இன்று, உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில், மே தின கொண்டாட்டம், காஞ்சிபுரம் பேருந்து நிலைய பணிமனை முன்பு நடைபெற்றது. அதிமுக மாவட்ட செயலாளர்‌ வி.சோமசுந்தரம் மற்றும் கட்சியின் அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோர் தொழிற்சங்க கொடியேற்றி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

மேலும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி, மே தின வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!