காஞ்சிபுரம் நகர வீதிகளில் மார்கழி மாத பஜனை நிறைவு விழா நிகழ்ச்சி
காஞ்சிபுரம் மடம் தெருவில் கடந்த 30 நாட்கள் அதிகாலையில் வீதிகளில் பஜனை பாடல்களை பாட தொடங்கிய சிறுவர், சிறுமிகள் இன்று நிறைவு தினத்தையொட்டி அம்மன்,ராதை, கோதை வேடமிட்டு வீதி வீதியாக உலா வந்தனர்.
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவத்கீதையில் கிருஷ்ணன் பகவான் கூறியுள்ளதைப் போல இறைவனை வழிபாடு செய்ய உகந்த மாதமாக மார்கழி மாதம் உள்ளது. மார்கழி மாதத்தில் சிவன் கோவில்களில் திருவெம்பாவையும், பெருமாள் கோவில்களில் திருப்பாவையையும் பாடப்படும். மார்கழி மாதம் பிறந்தாலே தெருக்களில் பஜனை கோஷ்டிகள் பாடிச் செல்வது வழக்கம்.மார்கழி மாதம் முழுவதும் நடைபெற்றும் , இன்று நிறைவு நாளில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்நிலையில் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் ஆலயத்தில் அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு நெற்றியில் திலகமிட்டு வந்த சிறுவர்கள், முதியவர்களின் வழிகாட்டுதலில் சிவ வாத்தியங்கள், ஆர்மோனியம், மிருதங்கம், ஜால்ரா, உள்ளிட்ட வாத்தியங்களை வாசித்து பஜனைப் பாடல்களை மனமுருக பாடி வருகின்றனர்.
மார்கழி மாதத்தில் பஜனைப் பாடல்களை பாட முதியவர்களே மறந்து வரும் நிலையில், மார்கழி மாதம் பிறந்த முதல் நாளே ஆர்வத்துடன் வந்து பஜனைப் பாடல்களைப் பாடத் துவங்கிய சிறுவர்களின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்றுடன் மார்கழி மாதம் நிறைவு அடைவதையொட்டி சிறுவர் சிறுமிகள் அம்மன், ராதை போல் வேடமிட்டு அனந்தஜோதி தெரு, சேலை ராமசாமி தெரு, மடம் தெரு , பிள்ளையார் பாளையம் என வீதி உலா வந்து உலா நிறைவு பெற்றது. இதில் ஏராளமான சிறுவர் சிறுமிகள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.
சின்ன காஞ்சிபுரம் பகுதியில் நடைபெற்ற மார்கழி மாத இறுதி நாள் பஜனை விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டு பஜனைப் பாடல்கள் பாடியவரே நகர வீதிகளில் உலா வந்தனர்.
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பஜனை மடங்களிலும் மார்கழி மாத நிறைவு பூஜையும் திருக்கோயில்களில் அதிகாலையில் நிறைவு பூஜைகளும் நடைபெற்றது. இவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu