காஞ்சிபுரத்தில் எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்த மாரத்தான் ஓட்டப்பந்தயம்
காஞ்சிபுரத்தில் நடந்த மாரத்தான் போட்டியினை எம்எல்ஏ எழிலரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
குழந்தைகள் நலம்,பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரத்தில் மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது. இதனை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இளைஞர்கள் இளம்பெண்கள் குழந்தைகள் என மூன்று ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த காஞ்சிபுரத்தில் ஆங்லோ ஈவன்டஸ் நிறுவனம் சார்பில் வரகி லஷ்மி சில்க்ஸ், ராஜம் செட்டி ஜூவல்லர்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டியை நடத்தியது.
காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து துவங்கிய மாரத்தான் ஓட்ட பந்தய போட்டியில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ சிவிஎம்பி எழிலரசன் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாரத்தான் ஓட்டப் பந்தய போட்டியில்,ஒரு கிலோ மீட்டர், மூன்று கிலோ மீட்டர், ஐந்து கிலோமீட்டர், உள்ளிட்ட பிரிவுகளில் இளைஞர்கள் இளம்பெண்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் குழந்தைகள் என மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை நிறைவு செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி ரயில்வே சாலை,கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, நெல்லுக்கார தெரு,உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று நிறைவு செய்தது.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாரத்தான் ஓட்டப்பந்தய நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், வராகி லக்ஷ்மி சில்க்ஸ் உரிமையாளர் எஸ்கேபி கோபிநாத், ஆங்லோ ஈவன்டஸ் மேலாண்மை இயக்குனர் புருஷோத்தமன் ராஜம் செட்டி ஜூவல்லர்ஸ் இயக்குனர், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி உள்ளிட்ட ஏராளமான முக்கிய நிர்வாகிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டியை முன்னிட்டு சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல், விஷ்ணு காஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரா சுப்ரமணியன் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகநாதன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu