உத்திரமேரூர் அருகே மானாம்பதி செல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்

உத்திரமேரூர் அருகே மானாம்பதி செல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்
X

மானாம்பதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

உத்திரமேரூர் அருகே மானாம்பதி செல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

உத்திரமேரூர் அருகே ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் மானாம்பதி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.


கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி, முதல் கால யாக பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.

இன்று காலை முதல், இரண்டாம் கால யாக பூஜைகள், நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து காலை 9:30 மணியளவில் சிவாச்சாரியார்கள் தலைமையில் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு கோவிலை சுற்றி வந்து விமான கோபுரத்தில் பூஜிக்கப்பட்ட புனித கலச நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தேறியது.

பின்னர், செல்வ விநாயகருக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பக்தர்களின் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது.

இந்த கும்பாபிஷேக விழாவில் மானாம்பதி கிராமத்தைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

இதேபோல் காரை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புளியாத்தம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இரண்டு தினங்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் துவங்கி இன்று காலை 7 மணி அளவில் இறுதி கால பூஜை நிறைவு பெற்றது.


இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் திருக்குடம் ஏந்தி திருக்கோயிலினை வலம் வந்து முகப்பு கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து மூலவர் உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
future of ai act