கோர்ட் விசாரணைக்கு மது போதையில் வந்த நபர்: சிறையில் அடைக்க உத்தரவு

கோர்ட் விசாரணைக்கு மது போதையில் வந்த நபர்: சிறையில் அடைக்க உத்தரவு
X

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ( கோப்பு படம்)

கோர்ட் விசாரணைக்கு மது போதையில் வந்த நபரை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்ற வழக்கில் நேரில் ஆஜராக வந்த நபர் , விசாரணையின் போது அதிக மது போதையில் பேசியதால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ். இவர் மீது சாலவாக்கம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு ஒன்று காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று விசாரணைக்கு வரவழைத்த நிலையில் விக்னேஷ் அதிக மது போதையில் இருந்துள்ளார்.

நீதிபதி விசாரணைக்கு அழைத்து அவருடைய பெயர் மற்றும் தந்தையின் பெயர் கேட்ட போது சரிவர பதில் அளிக்காமல் ஒருவித கிண்டலான செய்கை செய்ததை கண்டு நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவருடைய வழக்கறிஞருக்கு இதுபோன்ற செயல் நடக்கக்கூடாது என அறிவுரை செய்து, அவரை விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்து, அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அதன் பின் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி அவரை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணையின்போது மது போதையில் வந்து மீண்டும் திரும்பி விடலாம் என நினைத்த நபருக்கு உரிய பாடம் புகட்டும் வகையில் மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டு ட்விஸ்ட் செய்த நீதிபதியின் செயலை வழக்குக்கு வந்திருந்தோர் மற்றும் வழக்கறிஞர்கள் அதிர்ச்சியுடனும், நீதிபதி செய்த சரியான செயல் அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்கும் எனவும் வரவேற்று உள்ளனர்.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!