திமுகவினருடன் மாமன் மச்சான் உறவு கூட கிடையாது: முன்னாள் அமைச்சர் வளர்மதி
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசினார்.
திமுகவினருடன் எந்த விதமான சமாதனாமும் அதிமுகவினர் வைத்துக்கொள்ள கூடாது , மாமன் மச்சான் உறவுகளாக கூட இருந்தாலும் கட்சி என்று வந்தால் நாம் வேறு,அவர்கள் வேறு. என காஞ்சிபுரம் அடுத்த கீழ்அம்பியில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆசோசணை கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் அதிமுக மாநில மகளிரணி செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான வளர்மதி ஆவேசமாக பேசினார்.
காஞ்சிபுரம் அடுத்த கீழ்அம்பியில் உள்ள ஓர் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக காஞ்சிபுரம் மேற்கு ஒன்றியம் சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆசோசனை கூட்டமானது ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.
அதிமுக முன்னாள் அமைச்சரும்,காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளருமான வி.சோமசுந்தரம் முன்னிலையில், அதிமுக மாநில மகளிரணி செயலாளரும்,செய்தி தொடர்பாளரும்,முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றி பேசினார்.
அவர் பேசுகையில் திமுகவினருடன் எந்த விதமான சமாதனாமும் அதிமுகவினர் வைத்துக்கொள்ள கூடாது,அது மாமன் மச்சான் உறவுகளாக கூட இருந்தாலும் கட்சி என்று வந்தால் நாம் வேறு,அவர்கள் வேறு எனவும்,அதிமுகவிற்கு எவ்வித ஆபத்தும் வரக் கூடாது என்பதில் ஒவ்வொரு தொண்டரும் மிக வலிமையாக இருக்க வேண்டும் எனவும்,திமுக எதிர்ப்பு என்பது ஒவ்வொரு அதிமுக தொண்டனின் உடம்பிலும்,இரத்தத்திலும் ஓட வேண்டும்,அப்பொழுது தான் தன்னாலேயே நம் இயக்கத்திற்கு வெற்றி என்பது எழுதப்பட்ட சரித்திரமாக மாறும் எனவும்,மேலும் இதை உருவாக்க கூடிய சக்தி நம்முடைய கிளை கழக செயலாளர்களிடையே தான் உள்ளது,இதனை நீங்கள் மனதில் ஆழமாக வைத்துக்கொண்டு அனைவரும் அதிமுகவின் வெற்றிக்கு பாடுப்பட வேண்டும் என ஆவேசமாக குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன்,அதிமுக நிர்வாகிகள் கே.யு.எஸ்.சோமசுந்தரம்,சிறுவாக்கம் ஆனந்தன்,களக்காட்டூர் ராஜு,அக்ரி கே.நாகராஜன், சுமதி ஜீவானந்தம்,உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu