மஹாசிவராத்திரி : கோயில்களில் குடிநீர், கழிவறை வசதிகள் செய்துதர பாஜக கோரிக்கை
நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா மார்ச் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு கால பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
மும்பை சில ஆண்டுகளாகவே மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் இரவு முழுவதும் சிவாலயங்களில் சிவனை தரிசிப்பது வழக்கம். அவ்வகையில் கோயில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாநகராட்சி முழுவதும் பல்வேறு சிவன் ஆலயங்கள் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர் பூஜையில் கலந்து கொள்வது வழக்கம். பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கோயில் வெளிப் புறத்தில் பயோ டாய்லெட் அமைக்க கோரி காஞ்சிபுரம் மேற்கு நகர பாஜக தலைவர் அதிசயம் பா.குமார் தலைமையில் பாஜகவினர் மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். மகாசிவராத்திரியன்று மக்களுக்கு அடிப்படை வசதிகளை மாநகராட்சி உறுதி செய்து தொடர்ந்து குடிநீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu