காஞ்சிபுரம் ஸ்ரீ செல்வவிநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்  ஸ்ரீ செல்வவிநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
X

.விநாயகர் சதுர்த்தி மற்றும் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த உற்சவர் செல்வ விநாயகர்

காஞ்சிபுரம் ஜீயர் நாராயணபாளையம் தெருவில் அமைந்துள்ள செல்வவிநாயகர் திருக்கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஜீயர் நாராயணபாளையம் தெருவில் அமைந்துள்ளது செல்வவிநாயகர் திருக்கோயில். இக்கோயில் வளாகத்தில் துர்க்கை அம்மன்,நவக்கிரகம் ஆகியனவும் பரிவார தெய்வங்களாக உள்ளது. இக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி திங்கள்கிழமை மகா கணபதி ஹோமம் மற்றும் கோ.பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

மறுநாள் 30 ஆம் தேதி மகா பூர்ணாகுதி தீபாராதனைகளும், பேச்சாளர் பி.கந்தன் அவர்களால் விநாயகர் பெருமைகள் என்ற தலைப்பில் சொற்பொழிவும் நடந்தது.புதன்கிழமை காலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து மூலவருக்கும்,பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. இரவு உற்சவர் செல்வ விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை ஜீயர் நாராயணபாளையம் தெரு மற்றும் பாவாபேட்டைதெரு பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.


Tags

Next Story
பெரியாரிஸ்டுகள் என்னிடம் மண்டியிட்டு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்- இடைவிடாமல் தாக்கும் சீமான்..!