காஞ்சிபுரம் அருகே பெருமாள், கோதண்டராமர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே பெருமாள், கோதண்டராமர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
X

காஞ்சிபுரம் அடுத்த திம்ம சமுத்திரம் பகுதியில் ஸ்ரீ பெருமாள் கோதண்ட ராமர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் கிராம ஊராட்சியில் ஸ்ரீ பெருமாள் கோதண்டராமர் திருக்கோயில் ரூபாய் 15 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு யாகசாலை பூஜையுடன் குடமுழுக்கு நடைபெற்றது.

காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் கிராம ஊராட்சியில் ஸ்ரீ பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மட்டுமில்லாமல் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பல்வேறு பரிகார தளங்களும் திவ்ய தேசங்களும் அமைந்துள்ளது.

தற்போது பல்வேறு கிராமங்களில் உள்ள சிதலமடைந்த திருக்கோயில்கள் அனைத்தும் கிராம பொதுமக்கள் மற்றும் பல்வேறு பக்தர்களால் புனரமைக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த திம்ம சமுத்திரம் கிராம ஊராட்சியில் பழமையான ஸ்ரீ பெருமாள், கோதண்டராமர் திருக்கோயில் அமைந்திருந்த நிலையில் அதனை புதுப்பிக்க கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முடிவு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு புனரமைப்பு பணிகள் துவக்கப்பட்டு ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் ஆலய ஸ்தபதி சீனிவாசன், தேவராஜ் ஆகியோர் முன்னின்று பணிகளை துவக்கி முடித்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை காலை பந்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் ஸ்ரீ பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேக விழா துவங்கியது.

திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் திருக்கோயில் பிரகஸ்பதி ஸ்ரீதர் தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை 108 கலசங்கள் நிறுத்தி யாகசாலை பூஜைகளை துவக்கினர். தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று காலை 8 மணிக்கு பூர்ணாஹூதி நடைபெற்றது.

இதன்பின் கலச புறப்பாடு நடைபெற்று மேள, தாள வாத்தியங்களுடன் திருக்கோயிலை வலம் வந்து ஐந்து கலசங்கள் கொண்ட ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கங்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்று சிறப்பு தீப ஆராதனை பக்தர்களுக்கு காட்டப்பட்டது.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதன் பின் திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீம் பாமா ருக்மணி சமேத கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு புனித நீர் ஊற்றி அபிஷேகம் , மலர் ஆராதனை, தீப ஆராதனை நடைபெற்றது.

இவ்விழாவில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பொதுமக்கள் என கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஊராட்சி மன்ற தலைவர் புல்லட். தேவேந்திரன், துணைத் தலைவர் சுந்தரம் ஒன்றிய கவுன்சிலர் ஜெயவர்மன், கிராம நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, நாராயணசாமி , வார்டு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு விழா ஏற்பாடுகளை நடத்தினர். மாலை 6 மணிக்கு பெருமாள் தெரு வீதி உலாவும் இரவு 10 மணிக்கு வான வேடிக்கையும் நடைபெற உள்ளது.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil