காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ( கோப்பு படம்)
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் முதற்கட்டமாக மாநகராட்சியில் 8 முகாம்கள், நகராட்சியில் 4 முகாம்கள், பேரூராட்சியில் 3 முகாம்கள், நகர்ப்புறத்தினை ஒட்டியுள்ள கிராம பஞ்சாயத்துகளில் 15 முகாம்கள் என ஆக மொத்தம் 30 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஊராட்சி பகுதிகளில் இரண்டாம் கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11.07.2024 முதல் 22.08.2024 வரை 54 முகாம்கள் 256 கிராம ஊராட்சிகளில் நடத்தப்பட உள்ளது.
11.07.2024 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் கோவூர் ஊராட்சியில் மாண்புமிகு குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசனால் தொடங்கப்பட்டது.
தற்போது 24.07.2024 அன்று வாலாஜாபாத் வட்டம், களக்காட்டூர் ஊராட்சியில் கஜாமினி பார்டி ஹால் களக்காட்டூர்,
உத்திரமேரூர் வட்டம், ரெட்டமங்கலம் ஊராட்சியில், ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடல் ரெட்டமங்கலம்,
திருப்பெரும்புதூர் வட்டம் எறையூர் ஊராட்சியில், ஊராட்சி அலுவலக வளாகம் எறையூரில் நடைபெற உள்ளது.
26.07.2024 அன்று வாலாஜாபாத் வட்டம், அவளூர் ஊராட்சியில் துளசி மஹால் அவளூர்,
காஞ்சிபுரம் வட்டம் காரை ஊராட்சியில் தொடக்கப்பள்ளி அருகில் வன்னியர் தெரு காரை,
உத்திரமேரூர் வட்டம் மேனலூர் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி விளையாட்டுதிடல் காட்டுப்பாக்கம்,
திருப்பெரும்புதூர் வட்டம் பால்நல்லூர் ஊராட்சியில் ஆர்.சி.எம் தொடக்கப்பள்ளி வளாகம் அருகில் பால்நல்லூர் கண்டிகை,
குன்றத்தூர் வட்டம் சோமங்கலம் ஊராட்சியில் மீனாட்சி மஹால் சோமங்கலம் ஆகியவற்றில் நடைபெற உள்ளது.
பொது மக்கள் இம்முகாம்களை பயன்படுத்தி உரிய ஆவணங்களுடன் மனு செய்து பயன் அடையுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu