காஞ்சிபுரம் : தொடரும் மது வேட்டை .. 18 பேர் கைது..!

காஞ்சிபுரம் : தொடரும் மது வேட்டை .. 18 பேர் கைது..!
X
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தனிப்படை குழுவினரின் மது வேட்டையில் 100 வெளிமாநில பாட்டில்கள் மற்றும் 150 லிட்டர் கொள்ளளவு கொண்ட உறல் அழிப்பு. இதுதொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பு.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல்துறை சிறப்பு காவல் குழுவினரின் வெளிமாநில மது பாட்டில் விற்பனை மற்றும் சாராய ஊறல்கள் குறித்த தேடுதல் வேட்டை இரண்டாவது நாளாக நடைபெற்றது

இதில் பல்வேறு சோதனை சாவடிகள் அமைத்தும் , தனிநபர் அளித்த தகவலில் கிராமங்களில் ஊறல் தேடுதல் வேட்டையில் 100 மதுபான பாட்டில்கள் மற்றும் 150 லிட்டர் கொள்ளளவு கொண்ட சாராய ஊறல் நேற்று அழிக்கப்பட்டது. மது விற்பனை சாராய தயாரிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட 18 நபர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மது விற்பனை மற்றும் சாராய ஊழல குறித்து பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியான முதல் நாளில் 18 நபர்கள் கைது செய்யப்பட்டது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!