உள்ளாட்சிகளில் குப்பை கொட்டுவதற்கு சொந்த இடம் இல்லை: அமைச்சர் அன்பரசன்

உள்ளாட்சிகளில் குப்பை கொட்டுவதற்கு சொந்த இடம் இல்லை: அமைச்சர் அன்பரசன்
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் தலைமையில் நகராட்சி நிர்வாக துறை சார்பில் நடைபெற்ற ஆய்வு கூட்டம் .

பல நகராட்சி , பேரூராட்சி கழிவுகளை கொட்டுவதறாகு இடம் தேவைப்பட்டால் நிலம் வாங்க முயற்சி செய்யலாம்

தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மண்டல அளவிலான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைச்சர் கே. என். நேரு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி , நகராட்சி , பேரூராட்சி தலைவர்கள், செயல் அலுவலர்கள் தங்கள் பகுதிகளுக்கான தேவையான வளர்ச்சி பணிகள் குறித்து கோரிக்கைகளை முன் வைத்தனர்.இதேபோல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை கொட்டுவதற்கு போதிய இடம் இல்லை என்ற கருத்தையும், பல நகராட்சி நிர்வாகங்களுக்கு சொந்த இடம் இல்லாததால் , வெளியே செல்லும் நிலையில் பொதுமக்களின் பெரும் எதிர்ப்பை சந்திக்க வேண்டி உள்ளது என அமைச்சர் அன்பரசன் உள்ளிட்ட அனைவருமே இதை பதிவு செய்தனர்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் நகராட்சி, பேரூராட்சிகளின்‌ பொது நிதியிலிருந்து விலை குறைந்த இடங்களை வாங்கி பயன்படுத்தலாம் எனவும் அதற்கான ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்த வேண்டும் என அறிவுரை கூறினார்.


Tags

Next Story