பரந்தூர் விமான நிலையத்திற்காக நாகபட்டு கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி

பரந்தூர் விமான நிலையத்திற்காக நாகபட்டு கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி
X

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி இன்று நாகப்பட்டு கிராமத்தில் துவங்கி உள்ளது.

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் அமைய உள்ள கிராமங்களில் ஒன்றான நாகப்பட்டு கிராமத்தில் வீடுகள், கட்டிடங்களை அளவீடு செய்து மதிப்பீடு செய்யும் பணி துவங்கி உள்ளது. நிலம் எடுப்பு தனி தாசில்தார் பிரகாஷ் தலைமையில், வருவாய் துறையினர், பொதுப்பணி துறை கட்டிடங்கள் பிரிவு ஊழியர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கான அறிவிப்புகளை மத்திய மாநில அரசுகள் வெளியிட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் குடியிருப்புகள் விளைநிலங்கள் நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்று கூறி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


கிராம மக்களின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் கருத்தில் கொள்ளாமல் நிலம் எடுப்புக்கான அறிவிப்புகளை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை வெளியிட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களில் ஒன்றான நாகப்பட்டு கிராமத்தில் உள்ள வீடுகள், கட்டிடங்களை, நிலம் எடுப்பு தனி தாசில்தார் பிரகாஷ் தலைமையில், வருவாய் துறையினர், பொதுப்பணி துறை கட்டிடங்கள் பிரிவு ஊழியர்கள் துல்லியமாக அளவீடு செய்து மதிப்பீடு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் காவல்துறை பாதுகாப்போடு ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். வீடுகளை அளவீடு செய்யும் பணியை கண்டு கிராம மக்கள் கடும் வேதனை அடைந்து உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!