21 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்.
ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை பற்றி புதிய புயல் நடன குழுவின் இளம்பெண்கள் கோலாட்டம் நடத்தியபோது
108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ அஷ்டபுஜ திருக்கோயிலில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் அசத்திய நடன குழுவினர் கொட்டும் மழையிலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை நகர விடாமல் உறியடி நடனம்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் வைகுந்த பரமபதவாசல் கொண்ட திருத்தலமாக விளங்கி வருவது ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்று அதனைத் தொடர்ந்து பிரம்மோற்சவ விழாவும் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 21 ஆண்டுகளாக கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடாத நிலையில் தற்போது அறங்காவலர்களாக பொறுப்பேற்ற எஸ்.கே.பி சந்தோஷ் மற்றும் நிர்வாகிகள் கிருஷ்ண ஜெயந்தி விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
உற்சவர் ஆதிகேசவ பெருமாள் வேணுகோபாலன் அலங்காரத்தில் , மல்லி தாமரை மனோரஞ்சிதம் உள்ளிட்ட பல்வேறு பஞ்சவர்ணமாலைகளை அணிந்து எழுந்தருளியும் , உடன் கிருஷ்ணரும் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதனைத் தொடர்ந்து திருக்கோயில் வளாகம் முன்பு உறியடி நிகழ்வு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்த நிலையில் மாடவீதிகள் புறப்பாடு கண்டு உறியடி தளத்தினை ஆதிகேச பெருமாள், கிருஷ்ணர் உடன் எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சி புதிய புயல் நடன குழுவினை சேர்ந்த இளம் நடன மாணவிகள் அசத்தலான நாட்டியங்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களை ரசிக்க வைத்து நடனமாடினர்.
இச்சமயம் திடீரென காஞ்சி குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. மழையில் நனைந்தபடி நடனமாட முயன்ற போது கன மழை பெய்ததால் சிறிது நேரம் அருகில் இருந்த இடத்தில் சுவாமி நிலை நிறுத்தப்பட்டு மழை நின்றவுடன் உறியடி வெகு கோலாகலமாக நடைபெற்றது.
இதுவரை கிருஷ்ண ஜெயந்தி விழாவில் இது போன்ற ஒரு நடனங்களை கண்டிராத அனைவரும் நடனம் ஆகிய இளம் பெண்களை பாராட்டி மகிழ்ந்தனர்.
இதற்கு 21 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu