ஸ்ரீகச்சபேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்..

ஸ்ரீகச்சபேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்..
X
காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா தொடங்கியது. திருவிழா ஆலயத்திற்குள்ளேயே நடைபெறும்.

பெருமாள் ஆமை வடிவில் சிவனை வணங்கிய தலம் என்ற பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரர் திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு வழிகாட்டுதல்களின்படி கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து தினசரி சுவாமி வீதியுலாவும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை விழாவின் தொடக்க நாளை முன்னிட்டு விநயாகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று மூலவருக்கும்,உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடந்தன.பின்னர் சுவாமியும், அம்மனும் கோயில் அலங்கார மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

வரும் மே மாதம் 2 ஆம் தேதி தீர்த்தவாரியும், மறுநாள் 3 ஆம் தேதி 108 சங்காபிஷேகமும் நடைபெறுகிறது.வரும் மே மாதம் 7 ஆம் தேதி விழா நிறைவு பெறுகிறது.

இந்த ஆண்டு சுவாமி வீதியுலா நடைபெறவில்லையெனினும் கோயில் நிர்வாகமே சித்திரைத் திருவிழா முழுவதையும் ஆலய வளாகத்திற்குள்ளேயே நடத்துகிறது. முக்கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்படுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஜெ.ப.பூவழகி தலைமையில் விழாக்குழு தலைவர் வ.காளத்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil