கேலோ விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு மாரத்தான்

கேலோ விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு மாரத்தான்
X

தமிழகத்தில் நடைபெற உள்ள கேலோ விளையாட்டுப் போட்டிக்கான விழிப்புணர்வு மாரத்தான் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ்,  எஸ்பி சண்முகம்,  மேயர் மகாலட்சுமி தொடங்கி வைத்தனர்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் 19.01.2024 முதல் 31.01.2024 வரை நடைபெற உள்ள கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள், நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஒன்றிய அரசின் சார்பில் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த விளையாட்டு நிகழ்வாகும்.

இந்த விளையாட்டுப் போட்டிகள் 17 வயதுக்குட்பட்ட மற்றும் 21 வயதுக்குட்பட்ட பிரிவுகளைக் கொண்டுள்ளது.கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியில் 28 வகையான போட்டிகள் நடைபெற உள்ளது.

அதில் சென்னையில் தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, வாள்வீச்சு, வாலிபால், பளுதூக்குதல், ஏஸ்குவாஷ், வில்வித்தை, ஜூடோ, டேபிள் டென்னீஸ், பேட்மின்டன், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம், மல்யுத்தம், ஹாக்கி, நீச்சல், ஜிம்னாஸ்டிக், டென்னீஸ், துப்பாக்கி சுடுதல், கபடி மற்றும் சிலம்பம் (டெமோ) நடைபெற உள்ளது. மதுரையில் கோ-கோ, கட்கா விளையாட்டுப் போட்டியும், திருச்சியில் மல்லக்கம்பு, களரிப்பட்டு விளையாட்டுப் போட்டியும், கோவை மாவட்டத்தில் கூடைப்பந்து, தாங்-தா விளையாட்டுப் போட்டியும் நடைபெறுகிறது.

தமிழ்நாடு முழுவதும் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளின் செய்தியையும் உணர்வையும் பரப்பிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் விளம்பரம் மற்றும் கேண்டர் (டார்ச்) (Canter) சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதைக் கருத்தில் கொண்டு 06.01.2024 அன்று மாண்புமிகு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்களால் கேண்டர் (டார்ச்) (Canter) சுற்றுப்பயணம் துவக்கி வைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பரிந்துரைக்கப்பட்ட பாதை மற்றும் காலம் ஆகியவற்றில் பயணித்து மீண்டும் சென்னையை சென்றடையும். நமது காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு திறந்த வெளி மைதானத்திலிருந்து கேண்டர் (டார்ச்) (Canter) சுற்றுப்பயணம் காஞ்சிபுரம் நகரை சுற்றி விளம்பரப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளுக்கான காவல் துறையினரின் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி, விளம்பர ஊர்தி மற்றும் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை கொடி அசைத்து காலை துவக்கி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள்-2023 முன்னிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை போட்டிகள், ஓவியப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர் ஜெயசித்ரா, பயிற்றுநர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business