கௌரி நோன்பு பண்டிகைக்காக பொருட்கள் வாங்க குவியும் மக்கள்..!
கேதார கௌரி நோன்பு பண்டிகைக்காக பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள்
கேதார கௌரி விரத நோன்புக்காக பொருட்களை வாங்க பொதுமக்கள் காய்கறி சந்தை, மற்றும் பலசரக்கு மளிகை கடைகளில் குவிந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு அடுத்த நாள் கேதார கௌரி விரதம் எனும் நோன்பு குடும்ப ஐஸ்வரியம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றிற்காக சில குடும்பங்களில் கடைபிடிப்பது வழக்கம்.
பொதுவாகவே நவராத்திரி முடிந்த பின் மகிஷாசுரனை வதம் செய்த பின் அம்பிகை 21 நாட்கள் ஈசனுக்காக விரதம் இருந்த நாட்கள் தான் இந்த கேதார கௌரி நோன்பாகும். தீபாவளி மறுநாள் பார்வதி தேவி தனது விரதத்தை நிறைவேற்றி ஈசனிடம் இடமாகும் பெற்றதும் இந்நாளாகவும் கூறப்படுகிறது.
இந்த நோன்புக்காக அதிகாலை முதல் மாலை சூரிய அஸ்தமம் வரை எதுவும் சாப்பிடாமல் நாள் முழுவதும் விரதம் இருந்து, புதிதாக வாங்கப்பட்ட மண் பானையில் , இனிப்பு பொருட்களை சில குறிப்பிட்ட எண்ணிக்கையில் செய்து காய்கறி , பழங்களுடன் அதை படையில் இட்டும், நோன்பு கயிற்றினை குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் மட்டுமே அணிந்து கொள்வார்கள்.
அவ்வகையில் தீபாவளி மறுநாள் ஆன இன்று காஞ்சிபுரம் நகரில் உள்ள காய்கறி சந்தைகள் மற்றும் பல சரக்கு மளிகை கடைகளில் இந்த நோன்பிற்கான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனை வாங்க பொதுமக்கள் அதிகளவில் கூடி வருகின்றனர். குங்குமம் மஞ்சள், நோன்பு கயிறு வெல்லம், வின்ன பூ , தேங்காய் பழம் உள்ளிட்டவைகளையும் வாங்க அதிக அளவில் கூடி வருகின்றனர்.
மாலை அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று பூஜை செய்த பின் விரதத்தை முடிப்பர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu