கச்சபேசுவரர் கோயில் உண்டியல் காணிக்கை 5.57லட்சம்

கச்சபேசுவரர் கோயில் உண்டியல் காணிக்கை 5.57லட்சம்
X

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் திருக்கோயிலில் இருந்த 4 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

திருமால் ஆமை வடிவத்தில் சிவனை வழிபட்ட தலம் காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுவரர் திருக்கோயில்.பழமையும், வரலாற்று சிறப்பும் உடைய இத்திருக்கோயிலில் இருந்த 4 உண்டியல்கள் திறக்கப்பட்டு அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயா தலைமையில் எண்ணப்பட்டது.இதில் ரொக்கம் ரூ.5,57,540, தங்கம் 21 கிராம், வெள்ளி 145 கிராம் ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.உண்டியல் எண்ணும் பணியின் போது வட்டாட்சியர் நிர்மலா, அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்ததாக கோயில் செயல் அலுவலர் பூவழகி தெரிவித்தார்.

Tags

Next Story
ai as the future