காஞ்சிபுரத்தில் 100 கிலோ கேக் வெட்டி கருணாநிதி பிறந்த நாள் விழா

காஞ்சிபுரத்தில் 100 கிலோ  கேக் வெட்டி   கருணாநிதி பிறந்த நாள் விழா

கருணாநிதி நூறாவது பிறந்த நாளையொட்டி சாலவாக்கத்தில் கேக் வெட்டி குழந்தைகளுக்கு வழங்கிய எம்எல்ஏ சுந்தர். 

காஞ்சிபுரத்தில் 100 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், தி.மு. கழகத்தின் மறைந்த முன்னாள் தலைவரும் எல்லோரும் முத்தமிழ் அறிஞர், கலைஞர் என அன்பாக அழைக்கப்பட்டவருமான கருணாநிதியின் நூறாவது பிறந்தநாள் விழா வரும் ஜூன் மூன்றாம் தேதி தமிழக முழுவதும் தி.மு.க.வினாரால் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும் , உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் தலைமையில் அனைத்து பிரிவு நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய , பேரூர் , நகர கிளை செயலாளர் கூட்டம் நடைபெற்று அதில் ஜூன் மூன்றாம் தேதி கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து கழக கொடி ஏற்ற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

மேலும் பொது மக்களுக்கு அன்னதானம் நல திட்ட உதவிகளையும் வழங்கி புதிய உறுப்பினர்களை அந்நாளில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


அவ்வகையில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் சாலவாக்கம் பேருந்து நிலையம் அருகில் 100 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கேக் தயாரிக்கப்பட்டது. அதில் கருணாநிதி உருவம் தி.மு.க. சின்னங்கள் இடம் பெற்று காட்சிப்படுத்தப்பட்ட பின் அதனை நிர்வாகிகள் புடை சூழ மாவட்ட செயலாளரும் , உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் வெட்டி நிர்வாகிகள் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு வழங்கினார்.

இதேபோல் உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூராட்சி தலைவர் சசிகுமார் உள்ளிட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் சார்பில் பிரம்மாண்ட கேக் தயாரிக்கப்பட்டு அதனை எம்.எல்.ஏ .சுந்தர் பொதுமக்களுடன் இணைந்து வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சாலவாக்கம் கிளை கழக செயலாளர் சக்திவேல் , உத்திரமேரூர் ஒன்றிய நகர, ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story