காஞ்சிபுரம்: தடுப்பூசி முகாமை வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி ஆய்வு!

காஞ்சிபுரம்: தடுப்பூசி முகாமை வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி ஆய்வு!
X

காஞ்சிபுரம் கொரோனா தடுப்பூசி முகாமை வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் தடுப்பூசி சிறப்பு முகாமினை வருவாய்க் கோட்டாட்சியர் ராஜலட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறதுஇதில் 18 வயது மேல் 45 வயதுக்குள் என்றும் ,45+ என இரு தரப்பில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது மேலும் இரண்டாவது நிலையை தடுப்பூசியும் பொதுமக்களுக்கு போற்றப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் வருவாய் கோட்டத்தில் நகரங்களில் பெருநகராட்சி சார்பிலும், கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பிலும் 30க்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம் நாள்தோறும் நடத்தப்படுகிறது.

இம் முகாம்களில் செயல்பாட்டினை காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் ராஜலட்சுமி காஞ்சிபுரம் மாமல்லன் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற முகாம், பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பிடிவிஎஸ் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தடுப்பூசி செலுத்தி‌ கொண்டு காத்திருப்பு அறையில் இருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின் சுகாதார ஊழியர்களிடம் முகாமில் சிறிது காலதாமதமாக பங்கேற்றாலும் திருப்பி அனுப்பாமல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துமாறு அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!