காஞ்சிபுரம் தொண்டைமண்டல ஆதீனம் பதவி விலக முடிவு: மிரட்டல் எதிரொலியா ?

காஞ்சிபுரம் தொண்டை மண்டல திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமி.
காஞ்சிபுரம் தொண்டை மண்டல 233வது ஆதீனமாக இருந்து வரும் திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிக்கு மர்ம நபர்களின் மிரட்டலால் பதவி விலகுவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான மடங்களில் ஒன்று தொண்டை மண்டல ஆதீன திருமடம்.இந்த மடத்தின் 232-வது குருமகா சந்நிதானமாக இருந்து வந்த பரமாச்சார்ய சுவாமிகள் கடந்த 2021 டிச. 2-ம் தேதி முக்தி அடைந்தார். இதைத் தொடர்ந்து 233-வது குருமகா சந்நிதானத்தை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதற்காக 13 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் மடாதிபதியை தேர்வு செய்யும் நிகழ்வு சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருமட வளாகத்தில் நடைபெற்றது. இதில் திருவாரூர் அடுத்த விட்டம் கிராமத்தில் பிறந்த ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் ஜி.நடராஜன் மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
தருமபுர ஆதீன மடத்தைச் சேர்ந்த ஸ்ரீமத் திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள் தலைமையில் பொறுப்பேற்றார். இவர் ஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் என்ற பெயரில் அழைக்கப்பட்டு மடத்தில் உள்ள தெய்வங்களுக்கு பூஜைகளை செய்து வந்தார்.
தற்போது 76 வயதாகும் இவர், பல்வேறு ஆன்மீக நிகழ்வுகளில் கலந்து கொண்டு வந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மடாதிபதி பொறுப்பில் இருந்து வரும் ஏப்ரல் 13ம் தேதியுடன் விலகி கொள்ள முடிவு எடுத்துள்ளதாக தெரியவருகிறது. இந்த முடிவு குறித்து அவசர குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவரை மர்ம நபர்கள் மடத்திற்குள் வந்து மிரட்டி விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதன்பின் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu