காஞ்சிபுரம் கோவில் விழாவில் மாநகராட்சி மேயரை அவமதித்ததாக புகார்

காஞ்சிபுரம் கோவில் விழாவில் மாநகராட்சி மேயரை அவமதித்ததாக புகார்
X

மேயரை அலட்சியம் செய்தது குறித்து தேர் முன்பு வாக்குவாதத்தில்  மாமன்ற உறுப்பினர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஈடுபட்டனர்.

தேர் திருவிழாவிற்கு வருகை தந்த காஞ்சிபுரம் மாநகராட்சி மேயரை அலுவலர்கள் வரவேற்க தவறியதாக புகார் கூறப்பட்டது.

காஞ்சிபுரம் தேவராஜசுவாமி திருக்கோயில் வைகாசித்திருவிழா கடந்த 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு தினசரி பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தங்கக் கருட வாகன சேவைக் காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக தேரோட்டம் இன்று நடைபெற்றது.

தேரோட்டத்தை துவக்கி வைக்க வருகை தருமாறு முக்கிய பிரமுகர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் திருத்தேரில் சாமி தரிசனம் முடித்து விட்டு கீழே தேரோட்டத்திற்கு வந்து காத்திருந்தபோது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் யாரும் உடன் இல்லை.

அப்போது காவலர் ஒருவர் பெண்கள் யாரும் இங்கு நிற்கக்கூடாது எனக் கூறினார். மேயர் தான் நின்று கொண்டிருக்கிறார் என மாமன்ற உறுப்பினர் கமலக்கண்ணன் சொல்லியும் கேட்காமல் அனைவரும் வெளியேறுங்கள் என காவலர் கூறியதால் கோபத்துடன் மேயர் தேரை வடம் பிடித்து இழுக்காமலேயே சென்று விட்டார்.

கடந்த ஏழு தினங்களாக மாநகராட்சி ஊழியர்கள் பிரம்மோற்சவ விழாவிற்க்காக சிறப்பாக பணியாற்றினர். இந்நிலையில் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தால் அதற்கான அலுவலர் ஒருவரை நியமிக்க தவறிய இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings